மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆர்டிக் மீதான ஓசோன் துளைக்கு நடந்தது என்ன?- உலக வளிமண்டல அமைப்பு

- Advertisement -

ஆர்டிக் மீதான ஓசோன் துளை மூடப்பட்டுள்ளதாக உலக வளிமண்டல அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஓசோன் துளையானது GREEN LAND இலும் பார்க்க 3 மடங்கு பெரிதாகும் என்று உலக வளிமண்டல அமைப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -

வளிமண்டலத்தில் ஓசோன் படலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளான குளோரோ புளுரோ காபன் (chloro fluoro carbons (CFCs)) மற்றும் ஹலோன் போன்ற வாயுக்களின் அளவு குறைவடைந்துள்ளன.

இதேவேளை பூமியின் வளிமண்டலத்தின் 10 முதல் 50 கிலோமீட்டர் வரை காணப்படும் அடுக்கு மண்டலத்தில் மிகவும் குளிரான காலநிலை நிலவுகின்றது

மேலும் அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே படைமண்டலம் (Stratosphere) உள்ள அடுக்கிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது

இதனைத்தொடர்ந்து ஓசோன் படலத்தில் ஆர்க்டிக் மீது ஏற்பட்டுள்ள ஓசோன் துளை தற்பொழுது மூடப்பட்டுள்ளதாக உலக வளிமண்டல அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றலை அடுத்து சர்வதேச ரீதியில் முடக்க செயற்பாடுகள் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வளி மாசடைதல் அளவு குறைவடைந்துள்ளது.

இருப்பினும், ஓசோன் துளை மூடப்பட்டதிற்கும் “COVID தொற்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு தொடர்பு இல்லை என்று உலக வளிமண்டல அமைப்பின் பேச்சாளர் Clare Nullis தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz