மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் உயிரிழப்பு

- Advertisement -

கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

கட்டுநாயக்க மினுவாங்கொடை பகுதியில் நேற்று  இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக  கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சம்பவத்தில் காயமடைந்த நபர்  சிகிச்சைகளுக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை  குடும்பத்தகராறு காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்க தீர்மானம்!

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது 96 ஆயிரத்து 919 TAB...

இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை:ஜயந்தி விஜேரத்ன கருத்து!

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் உவர் நீர் இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நீர்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்வதற்கான திருத்தச் சட்டமூலமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டம்!

ஆபாச வெளியீடுகளை தடை செய்வதற்கான திருத்தச் சட்டமூலமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழிநுட்பம் மற்றும் ஏனைய...

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி!

நாட்டில் ஐந்து மிகப் பெரிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஹெம்மாத்தகமை நீர்வழங்கல் திட்டம், ருவான்வெல்ல நீர்வழங்கல்...

குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 முன்னெடுக்கப்படும்!

நாட்டின் குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் 10 வருடங்களுக்கு ஒருமுறை, குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கணக்கெடுப்பு கட்டளை...

Developed by: SEOGlitz