மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் விடுத்துள்ள அறிக்கை…!

- Advertisement -

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்கச்செய்து தேர்தலுக்கு முன்பாக அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே எதிர்க்கட்சியினரின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொரோனா  வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு   எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  உலக  நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை  முன்னிலை வகிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில்  இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு  சூழ்நிலையில் பொதுத் தேர்தல் நடாத்தப்படுமாயின் அது எதிர்க்கட்சியினருக்கு பாதகமாக அமையும்  எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்   பழைய நாடாளுமன்றத்தை மீண்டும்   கூட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ள எதிர்கட்சியினர் , இதனூடாக   அரசியல் இலாபம்  ஈட்ட முற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன்  பின்னர்  நாட்டின் தேவைகளுக்கு நிதி  செலவிடுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சினர் விசனம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அரசியலமைப்பின் பிரகாரம்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர்    நாடாளுமன்றம் நிதி ஒதுக்கீடு  செய்யதா எந்தவொரு   விடயத்திற்கும்  நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம்   ஜனாதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில்  சுட்டிக்காட்டியுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும்  அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று...

சாரா என்ற புலஸ்தினி வழக்கு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி எனும் நபர் தொடர்பாக தகவல் வழங்கிய நபரிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்த வழக்கு, தேவை ஏற்படின் மீண்டும் அழைக்கப்படும் என கல்முனை நீதிமன்ற...

உலக வர்த்தக மையத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக மையம் வெளியிட்டுள்ள...

அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்- சாள்ஸ் நிர்மலநாதன்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு...

அரசாங்கம் மீது குற்றம் சுமத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!

ரிஷாட் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி அரசாங்கம் நாட்டில் பல்வேறு விடயங்களை மறைத்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார், CAPITAL...

Developed by: SEOGlitz