மெய்ப்பொருள் காண்பது அறிவு

தன்மீதான குற்றச்சாட்டு தொடர்பில் கரு ஜயசூரிய விளக்கம்

- Advertisement -

தான் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுப்பதாக வெளியான போலி செய்தி தொடர்பில், சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடங்களுக்கு இன்று விடுத்துள்ள விசேட அறிவிப்பொன்றிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நான் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானதோடு இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் என பொலிஸ் ஆணைக்குழுவே உரிய நிறுவனங்களுக்கு கூறியது. சுயாதீன ஆணைக்குழுவுக்கும் நான் தலைமைதாங்குகின்ற அரசியலமைப்பு சபை மீதும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைப்பதற்கு அவர்களுக்கு தேவையாக இருந்தது.இந்த நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக இந்த இரண்டு தரப்புக்களால் மிகவும் முக்கியமான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதனை நாசகார அரசியல் செயற்பாடாக நான் பார்க்கின்றேன்.இந்த நிலையில் எமது நாட்டின் நன்மைக்காக அதற்கு பதிலளிப்பது அத்தியவசியமாகும் என நான் நம்புகின்றேன்.இது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளேன்.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தடைகள் இல்லை : சட்டமா அதிபர் திணைக்களம்!

நாடாளுமன்றத் தேர்தல் திகதி வர்த்தமானி குறித்து உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள், இலங்கையில் கொவிட்-19 கட்டுப்படுத்தப்படுவதைக் குறிப்பதால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை என அரச சட்டத்தரணியும் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

இலங்கையுடன் இணைந்தே பயணிப்போம் : இந்திய உயர் ஸ்தானிகர் உறுதி!

இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினையடுத்து கொழும்பில் உள்ள இந்திய உயர்...

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு!

அரிசி வகைகளின் அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், இன்று நள்ளிரவு முதல் அரிசியின் அதிகபட்ச சில்லறை விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்...

நாட்டின் கொரோனா தொற்று : இன்றைய நிலவரம்!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 732 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 20 பேர் குணமடைந்துள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...