மெய்ப்பொருள் காண்பது அறிவு

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை வரை நீடிப்பு

- Advertisement -

நாட்டில் தொடர்ந்துவரும் மழையுடனான வானிலைக் காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளைவரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு  எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கலவான மற்றும் கிரியெல்ல, ஓப்பநாயக்க, பலாங்கொடை, எகலியகொடை, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்பிட்டிய, கொடக்கவெல, இம்புல்பே, கஹவத்த, கொலன்ன மற்றும் வெலிகாபொல் ஆகிய  பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் பத்தேகம, நெலுவ மற்றும் தவலம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும்,   அக்மீமன, எல்பிட்டிய, நாகொட, போத்தலை மற்றும் நியகம பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சல் நிற அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் தெரனியகலை, புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், அரநாயக்க மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு   மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலகபிரிவிக்கும், மாத்தளை மாவட்டத்தின் உடுவெல பிரதேச செயலகபிரிவிக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், கொத்தமலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்தறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, புலத் சிங்ஹல மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாக பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், ஹொரண மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, கொடபொல ஆகிய பிரதேச செயலப் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் கங்க இகல கோரல, தும்பனை, கண்டிப்பட்டினம், கங்கவட்ட கோரல மற்றும் பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச செயலப் பிரிவுகளுக்கு மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , மலைபாங்கான பிரதேசங்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது

மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், சுவர்களில் வெடிப்பு, நிலம் தாழ் இறங்குதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனர்தங்கள் ஏற்படும் சந்தர்பங்களில் அது தொடர்பாக இடர்முகதமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz