மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

- Advertisement -

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து இன்று போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

40 வயதுடைய  ஆண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று 39 பேருக்கான COVID – 19 பரிசோதனை யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த 14 பேருக்கும், போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட 4 பேருக்கும் இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

மேலும், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 4 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கேப்பாபிளவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 80 வயது முதியவர் இன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

அவருக்கும் இன்று கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்ப்டுள்ளது.

மேலும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேருக்கும், பாதுகாப்பு படையினர் தனிமைப்படுத்த நிலையமான கிளிநொச்சியில் 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த 39 பேருக்கான பரிசோதனை அறிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டுவதாகவும்  யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

யாழில் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுச்சந்தை வியாபாரிகளின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது. தமது வியாபார நடவடிக்கையினை புறக்கணித்து, சந்தைக்கு முன்பாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது அலுவலக செய்தியாளர்...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம்! விபரம் உள்ளே..

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட   பதுகம குடியிருப்பு பகுதி   தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா...

Developed by: SEOGlitz