மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் திட்டமிடப்பட்டுள்ள  5 டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை- கங்குலி

- Advertisement -

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் திட்டமிடப்பட்டுள்ள  5 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்  தொடர்  இந்த ஆண்டு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் Sourav Ganguly தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட  தொடரொன்றினை நடத்த  திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலியா கிரிக்கட்  சபையின் தலைமை நிறைவேற்று  அதிகாரி kevin roberts தெரிவித்திருந்தார்.

- Advertisement -

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் திட்டமிடப்பட்டுள்ள குறித்த  5 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளைக் கொண்ட தொடரை  இந்த வருடம் நடத்துவதற்கு சாத்தியமில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் ஆட்டங்கள்   இடம்பெறுவது சந்தேகத்திற்கிடமாக அமைந்துள்ளது,

இந்த நிலையில் குறித்த தொடர்கள் இடம்பெறாத பட்சத்தில் அவுஸ்திரேலியா கிரிக்கட் சபைக்கு  சுமார் 196 மில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவுஸ்திரேலியா  விளையாட்டு துறை அமைச்சர் Richard Colbeck தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம் – ஒருவர் உயிரிழப்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி – பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இன்று காலை இடிந்து வீழ்ந்துள்ளது. இந்தக் கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சுமார் ஒன்றரை...

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

Developed by: SEOGlitz