முன்னதாக, கொரொனா தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகத்தில் அமுலில் உள்ள ஊரடங்கை எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு குறித்த மாநிலங்கள் தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இதனைத்தொடர்ந்து இந்தியா நாடாளாவிய முடக்க செயற்பாடுகளை மீண்டும் அமுல்படுத்தியுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மணித்தியாலங்களில் ஆயிரத்து 591 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 239 ஆக உயர்வடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது