மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியா தொடர் முடக்கம்- மோடி விடுத்துள்ள விசேட அறிவிப்பு

- Advertisement -

இந்தியாவை தொடர்ந்தும் இரண்டு வாரங்களுக்கு முடக்க தீர்மானிக்கப்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியாவை முற்றாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மேலும் இரண்டுவாரங்களுக்கு முடக்க நிலையை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 323 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்தியாவின் சென்னையில் இன்று மாத்திரம் 138 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளதோடு 15 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன

இதேவேளை, இந்தியா முழுவதும் இன்றைய தினம் 548 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், ஆயிரத்து 79 உயிரிழப்புகள் இதுவரை இந்தியாவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைக்குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயம்!

வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய, குறித்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே...

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

Developed by: SEOGlitz