ஊரடங்கு சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படமாட்டாதென ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில், அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அறிமுகப்படுத்த பட்டிருந்தது.
இதேவேளை கொரோனா தொற்று அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரவேசிக்கவோ அல்லது வெளிசெல்லவோ அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.