மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்படுவது குறித்து ராணுவத் தளபதியின் அறிவிப்பு

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 25 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் 18 பேர் வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை  தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்களுடன் தொடர்புடைய   மேலும் ஐவர் உள்ளடங்குவதாகவும்   ராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளர்.

அவர்களுள் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான வெலிசறை கடற்படை முகாம் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 296 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், 526 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்தை ஆரம்ப வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆரம்ப வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆரம்ப வைத்தியசாலை, கடற்படை வைத்தியசாலை மற்றும் ஹோமாகமை ஆரம்ப வைத்தியாசலைகளிலேயே இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜெனிவா அழுத்தங்களுக்கு தயாராகும் இலங்கை அரசாங்கம்…!

எதிர்வரும் ஜெனிவா மனிதவுரினைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக பாரிய அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதறடகான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

முக்கிய அமைச்சரின் PCR முடிவு வெளியானது…!

கல்வி அமைச்சர் ஜி.எல். பரீஸிற்கு முன்னெடுக்கபட்ட கொரோனா PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், கல்வி அமைச்சர் ஜி.எல். பரீஸ்...

பவித்ரா உள்ளிட்ட 353 பேருக்கு இன்று தொற்று உறுதி – முழு விபரம் உள்ளே..!

கொரோனா தொற்றுக்குள்ளானமேலும் 353 பேர் அடையாளம் கா ணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 57 ஆயிரத்து 216ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, தொற்றுக்குள்ளான...

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

Developed by: SEOGlitz