உரத்தினை அதிக விலைக்கு விற்பனை செய்கின்ற வர்த்தகர்களின் வர்த்த உரிமையினை இரத்து செய்யவுள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் மகேஷ் கம்மம்பில தெரிவித்துள்ளார்.
மானிய அடிப்படையில் 50 கிலோகிராம் பசளை ஆயிரம் ரூபாவாகவும், கலப்பு பசளை ஆயிரத்து 150 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் கூறினார்,
அதற்கான விலை அதன் உரப் பைகளிலேயே பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் மகேஷ் கம்மம்பில சுட்டிக்காட்டுகின்றார்.
உர இறக்குமதி நிறுவனங்களின் போக்குவரத்து செலவு மற்றும் விற்பனையாளர்களின் செலவுகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனவே மானிய அடிப்படையில் உள்ள உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாக இருப்பின் அது தொடர்பில் பொது மக்களுக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய உரச் செயலகம் தெரிவிக்கின்றது,
இதற்கமைய 0113 40 39 31 எனும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 0113403794 எனும் இலக்கத்திற்கோ அழைப்பினை ஏற்படுத்தி தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மானி அடிப்படையில் வழங்கப்படுகின்ற உரம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது,