நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலையினால் 45 ஆயிரம் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்கமைய களுத்துறை, ஹம்பாந்தோட்டை இரத்தினபுரி மற்றும் காலி உள்ளிட்டபகுதிகளில் 45 ஆயிரம் இணைப்புகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் நேற்று இரவு பெய்த கடுமழை காரணமாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளாதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் பல பாகங்களில் நிலவிவரும் சீரற்ற வானிலை காணரமாக 9 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன். பிரதான ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.