மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட பிரஜைகளை அவர்களின் வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொழும்பில் தங்கியிருந்த வெளிமாவட்ட பிரஜைகள் தங்களின் வசிப்பிடங்களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதன் முதற்கட்டமாக கர்ப்பிணித்தாய்மார், நீண்டால நோயாளர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் குறித்த அனைவரும் பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோனின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.