தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைதீவு தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த, கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, உயிரிழந்தவர்களின் சடலங்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் நாளைய தினமே வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குணசிங்கபுர பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த பலர் அண்மையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்
இந்த நிலையில், அந்தக் குழுவைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் எனவும், அவர்கள் ஏற்கனவே சுகயீனம் காரணமாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.