மே 26 ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
ஊரடங்கு உத்தரவு குறித்த புதிய அறிவித்தல் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும்.
அத்துடன், மே 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல், நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊடரங்கு அமுலில் இருக்கும்.
அதாவது, நாடளாவிய ரீதியில், அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும்.
மறு அறிவித்தல் வரை தினசரி இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.