மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 214 பேர் கைது

- Advertisement -

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான 6 மணிநேர காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 66 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்றைய தினம் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 45 ஆயிரத்து 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் 11 ஆயிரத்து 765 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் அக்குரஸ்ஸ  பிரதேச சபைத்தலைவர் உள்ளிட்ட ஐவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலிய பொலிஸாரால்  இன்று முற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுமதிப்பத்திரம் இன்றி சிவனொளிபாதமலைக்கு பயணித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்து : நால்வர் உயிரிழப்பு!

வடக்கு சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் Shanxi மாகாணத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால்...

Chennai Super Kings  அணியை வீழ்த்தியது Rajasthan Royals!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டியில் Rajasthan Royals அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. 13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 37 ஆவது போட்டி அபுதாபி சர்வதேச கிரிக்கெட்...

பரீட்சை நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கைகள்!

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கு விசேட ஏற்பாடுகள்!

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று முதல்  இணைய (Online) வழியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ மேற்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ்  தொற்று பரவுவதை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு அதிகாரி விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!

கடந்த வருடம் 11 ஆம் திகதி நிலவரப்படி,  சஹரான் ஹாஷிம் குண்டு வெடிப்பை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தகவல் தொடர்பாக சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்ததாக அரச புலனாய்வு சேவையின்...

Developed by: SEOGlitz