- Advertisement -
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட 10 பேரில் 9 பேர் வெலிசறை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
- Advertisement -
இதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 935 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் 449 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.