நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உள்ளானவர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 10 பேர் இன்று முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 569 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.