மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் 16-05-2020

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 937 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் மேலும் இருவர் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது

- Advertisement -

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும், 43 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, அவர்களில் 26 கடற்படை வீரர்களும் உள்ளங்குகின்ற நிலையில், இதுவரை 177 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான 520 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 407 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முழுமையாக நிறைவு செய்த கடற்படையினரின் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 67 பேர் தமது வீடுகளுக்கு அனுப்பபட்டுள்ளனர்.

இதற்கமைய, 16 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் நேற்றும், இன்றும் அனுப்பிவைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இதன்படி, ஹபராதுவையில் தங்கவைக்கப்பட்டிருந்த 18 பேரும், அனுராதபுரத்தில் தங்கவைக்கப்பட்டிந்த 31 பேரும் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், கல்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 18 பேர் இன்றைய தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்

இந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு தமது வீடுகளிலேயே சுய தனிமையில் இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பாக வெளியான தகவல்கள்.

நாட்டில் இன்றைய தினம் இறுதியாக அடையாளங் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அவர்களில் ஒருவர் மீயன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும், மற்றைய நபர் இந்தியாவின் சென்னையிலிருந்து வருகை தந்து கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை நாட்டில் தொள்ளாயிரத்து 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 520 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், 408 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் தொள்ளாயிரத்து 38 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz