- Advertisement -
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும், 26 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 177 ஆக உயர்வடைந்துள்ளது.
இராணுவ வைத்தியசாலையில் இருந்து 20 பேரும், முல்லேரியாவ வைத்தியசாலையில் இருந்து 5 பேரும், ஹோமாகம வைத்தியசாலையில் ஒருவருமாக 26 பேர் இவ்வாறு இன்று வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.