கனடாவில் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இது குறித்த இறுதி தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் நேற்று தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதற்கமைய ஆயிரத்து 500 வகையான தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் இராணுவ தர தாக்குதல் ஆயுதங்களை வாங்கவோ, விற்கவோ, கொண்டு செல்லவோ, இறக்குமதி செய்யவோ அல்லது பயன்படுத்தவோ இனி அனுமதிக்கப்படாது.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் சமீபத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால் இடம்பெற்ற 12 மணி நேர பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.