மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆண்களின் விந்தணுக்களில் கொரோனா வைரஸ் – வெளியான ஆய்வுத் தகவல்..!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஷாங்க்வி மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஆண்களின் விந்தணுக்களில், கொரோனா வைரஸ் இருக்குமா என்ற ரீதியில் ஆய்வுகள் முன்டினடுக்கப்பட்டிருந்தன.

இதன்படி, சீனாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 ஆண்களிடம் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்டப்டுள்ளன.

இவர்களில் 16% பேருக்கு விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது எனவும் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

பொதுவாக வைரஸ்களால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் நோயாளி குணமடைந்த சில மாதங்களுக்குப் பின்னரும் விந்தணுக்களில் வைரஸ் இருப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

அந்த வகையில் கொரோனா வைரஸ் இவ்வாறு பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் கிரிக்கட் சுற்றுத்தொடர்கள்

2020 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் மற்றும் மகளிருக்கான கிரிக்கட் போட்டித்தொடர்களுக்குரிய மீள் திருத்தப்பட்ட முழுமையான நேர அட்டவனையை அவுஸ்திரேலிய  கிரிக்கட் சபை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது அவுஸ்திரெலியாவில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அவுஸ்திரேலியா...

நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது

தடுத்து வைக்கப்பட்டிருந்த நிராயுதபாணியான கறுப்பினத்தவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரின் முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை 46 வயதான ஜோர்ஜ் ப்லொயிட் எனும் கறுப்பினத்தவர் பொலிஸாரின் முன்...

மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி….

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  சுகாதாச அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து...

மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 8 பேரும் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்று தேசிய...

அங்கஜன் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் ஏற்பட்டிருந்த நிலையில், உரிய திகதியில் விண்ணப்பங்கள் அனுப்பமுடியாது...