ICC டெஸ்ட் தரவரிசையில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் முதலிடத்தில் வகித்து வந்த இந்திய கிரிக்கட் அணி 4 ஆண்டுகளுக்கு பின்பு அதனை இழந்துள்ளது.
இதனடிப்படையில் ICC டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியா கிரிக்கட் அணி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் இடம்பெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியாஆண்கள் கிரிக்கட் அணி இந்தியாவின் முதலிடத்தை தட்டிப்பறித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 115 புள்ளிகளுடன் நியூஸிலாந்தும் 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மேலும் 91 புள்ளிகளுடன் இலங்கை ஐந்தாம் இடத்திலும் 86 புள்ளிகளுடன் பாக்கிஸ்தான் 7ஆம் இடத்திலும் ICC டெஸ்ட் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை இருபதுக்கு இருபது தரவரிசையிலும் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி 278 புள்ளிகளுடன் முதலிடத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது