மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

- Advertisement -

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டுக்கு மேலாக காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றராக காணப்படுவதோடு, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்பங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மின் உபகரணங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக செயற்படுவதுடன், வெட்டவெளியான இடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறும் இடர்முகாமத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால்...

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny கைது!

ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் Alexei Navalny, கடந்த ஆண்டு விஷத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை...

இரத்தினபுரி வைத்தியசாலையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள்  இருவர் உட்பட  நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நிர்வாக பிரிவினரிடம் மேற்கொள்ளப்பட்ட ரப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக  சுகாதார...

Developed by: SEOGlitz