மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் 2020/05/25-07.00AM

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய  தினம்  இரவு மேலும்  23 தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப்பிரிவு தெரிவிக்கின்றது.

- Advertisement -

 இதனடிப்படையில்  நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில், 19 பேர் குவைத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, திருகோணமலை தனிமைப்படுத்தல் முகாமில், தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 30 பேர் குவைத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மற்றுமொருவர், இந்தோனேஷியாவில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு, பெல்வெஹெர தனிமைப்படுத்தல் முகாமில், தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும், மற்றைய இருவரும் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

 இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 674 ஆக காணப்படுகின்றது.

 மேலும், 97  பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

 இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 455 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் இவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 833 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 664 பேரும், ஏனைய 169 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டில் 53 ஆயிரத்து 92 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

சீனாவிடமிருந்து  16 இலட்சம் sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு நன்கொடை!

+சீனாவிடம் இருந்து  16 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. பெய்ஜிங் நகரில் இருந்து பயணித்த  2 விசேட விமானம் மூலம்  இன்று முற்பகல் 8 மணியளவில்  குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக...

Developed by: SEOGlitz