மெய்ப்பொருள் காண்பது அறிவு

விசேட விமானம் மூலம் இலங்கை வந்த சீஷெல்ஸ் பிரஜைகள்!

- Advertisement -

கொரோனா தாக்கம் காரணமாக, நாடு திரும்ப முடியாத நிலையில், சீஷெல்ஸில் (Seychelles) சிக்கியிருந்த இலங்கையில் தொழில் புரியும் அந்த நாட்டு பிரஜைகள் சிலர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆபிரிக்க நாடான சீஷெல்ஸ் (Seychelles) நாட்டுக்கு சொந்தமான HM 8360 எனும் இலக்க விசேட விமானம் மூலம் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

- Advertisement -

பிற்பகல் 2.45க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த விசேட விமானத்தின் மூலம் 35 சீஷெல்ஸ் (Seychelles) பிரஜைகள் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பயணிகள் அனைவரும் தொற்று நீக்கும் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களது உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, குறித்த 35 சீஷெல்ஸ் (Seychelles) பிரஜைகளும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைப்பு குறித்த செய்திகளை ஐ.சி.சி மறுப்பு!

உலகக்கிண்ண ரி 20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை ஐசிசி மறுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி)...

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலிற்கு நாளை நாடாளுமன்றத்தில் அஞ்சலி!

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்  அரச மரியாதை நிமித்தம் நாளைய தினம்  நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாளைய...

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகளைக் குழப்புவதற்கு இடமளிக்க மாட்டேன் : ஆளுநர் சாள்ஸ்!

வடமாகாண நிர்வாகச் செயற்பாடுகள் உள்ளிட்ட வடக்கின் அமைதியான நிலைமைகளை குழப்பியடிப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் பிஸ்.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று மாதங்கள் விடுப்பில் செல்வதற்கான அனுமதி கோரியமை, உட்பட அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள்...

சிறுபோகச் செய்கைக்காக மன்னார் கட்டுக்கரைக்குளம் திறப்பு!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான சிறு போக நெற் செய்கைக்கான நீர் விநியோகம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர்...

தொண்டமான் மறைவு : வேட்பாளர் வெற்றிடம் குறித்து தேர்தல் திணைக்களம் விளக்கம்!

தேர்தலொன்றை நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின்...