ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இலங்கையில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாக இந்திய பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொலைபேசி வழியாக சிறப்பான பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் இந்திய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தமது நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் பொருளாதார தாக்கம் ஆகியவற்றுக்கு, இந்தியா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய உதவியுடனான அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்தவும், முதலீட்டு தொடர்புகளை வலுப்படுத்தவும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளதாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.