- Advertisement -
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 40 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து இன்று வெளியேறியுள்ளனர்.
இதன்படி, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
இன்று, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் புதிதாக அடையாளம் காணப்படாத நிலையில், 399 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1068ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.