சர்வதேச ரீதியில் இலங்கை தேயிலைக்கு பாரிய வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொடுக்க முடியாவிடின் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற் சங்கங்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் இதனை தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.