மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் தொற்று இதுவரை சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை – பவித்ரா தெரிவிப்பு

- Advertisement -

நாட்டின் இயல்பு வாழ்க்கையினை வழமை நிலைக்கு கொண்டுவரும் போது, சுகாதார நடைமுறைகளை மக்கள் உரிய முறையில்  பின்பற்றுகின்றனரா என பொதுசுகாதார பரிசோதகர்கள் கண்கானிப்புகளை முன்னெடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சின் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

- Advertisement -

இதேவேளை, சுகாதார ஆலோசனைகளை  மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு   பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது இதுவரை சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை எனவும் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்கப்படும் ஆலோசணைகளுக்கு அமைய கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை  இதற்கு காரணமெனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மழைகாலம் ஆரம்பித்துள்ளதன் காரணமாக டெங்கு ஒழிப்பு திட்டங்களில் போதியளவு கவனம் செலுத்துமாறும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவுக்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz