கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை மே மாதத்திற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே மாதத்துக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்துக்கான கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நடவடிக்கை மே மாதத்திலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.