மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளை 500 பேர் கொழும்பிலிருந்து வெளியேற்றம்

- Advertisement -

கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 500 பேர் நாளைய தினம்  தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள  நபர்களை தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த நடவடிக்கை நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, அனுப்பிவைக்கப்படவுள்ள அனைவரும் நாளை காலை ஏழு மணிக்கு நுகேகொடை பொலிஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்களுக்கு தேவையான சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், சிறுபிள்ளைகள் உள்ள தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்களும் இவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், இவ்வாறு அனுப்பிவைக்கப்படுபவர்கள் தமது ஊர்களில் 14 நாட்கள் அல்லது சுகாதாரத் தரப்பினரால் வழங்கப்படுகின்ற காலப்பகுதிக்கு சுய தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை அறிமுகம்

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் புதிய வழிமுறையொன்றினை   கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி  அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில்  தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில்,...

கொரோனா தொற்று – புதிய செயலி அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில் புதிய (APP) செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள்,...

மேலும் 168 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஜனாதிபதி செயலகம் சற்றுமுன் விடுத்த அறிவித்தல்!

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக வீட்டில் இருந்து தொழில் புரியும் நடைமுறையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களுக்கே...

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்கர்ளுக்கு இஸ்ரேல் கடவுச்சீட்டு – மைக் பொம்பியோ அறிவிப்பு!

ஜெருசலேமில் பிறந்த அமெரிக்க மக்கள் இஸ்ரேலிய கடவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த அமெரிக்க மக்கள் தமது கடவுச் சீட்டுகளில் பிறந்த...

Developed by: SEOGlitz