மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்

- Advertisement -

அனைத்து ஓய்வூதியக் கொடுப்பனவுகளும் இன்று  மற்றும் நாளை வழங்கப்படவுள்ளன.

பொருளாதார மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

- Advertisement -

பொருளாதார மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்குமான ஓய்வூதியம் மாதாந்தம் 10ஆம் திகதி வழமையாக வழங்கப்பட்டு வருகிறது.

எனினும்,  வெசாக் தினம் மற்றும் எதிர்வரும் 10 ஆம் திகதி  வார இறுதி நாள் என்ற காரணத்தினால்,  இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இன்றும் நாளையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கடந்த மாதம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் இந்த மாதமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் ஊடாக கிராம உத்தியோகத்தர்கள் அடங்களாக  கிராம மட்டத்தில் அரச கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்,  அமைப்புக்கள்  மற்றும்  முப்படையினர் ஆகியோர் இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்து இந்தத்  வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது

இதற்கமைய, ஓய்வூதியம் பெறுபவர்களை வங்கிகளுக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளை குறித்த தரப்பினர் முன்னெடுக்க உள்ளனர்.

அத்துடன், இந்த நடவடிக்கைக்கு அமைய அவர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும், வைத்திய சிகிச்சைகளை மேற்கொள்வதற்கும்  வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக  பொருளாதார மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி இளைஞர் ஒருவருக்கு பாரிய காயத்தை ஏற்படுத்தியமை...

ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதிப்புக்குள்ளாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. குறித்த வழக்கு, சிசிர...

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 20 ஆம் திருத்தத்தின் இராண்டாம் வாசிப்பு- முழு விபரம் உள்ளே!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு நீதியமைச்சர் அலிசப்ரியினால் இன்று காலை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக மாற்றங்கள் செய்யப்பட்டு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இருபதாம் திருத்த...

இமயமலை எல்லையை தாண்டி இந்திய நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவர் திருப்பி அனுப்பி வைப்பு!

இமயமலைப் பகுதியில் எல்லை தாண்டி தமது நாட்டுக்குள் பிரவேசித்த சீன இராணுவ சிப்பாய் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்த குறித்த சிப்பாய், நேற்று...

ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கொன்று உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயோர்க் டைம்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீன வங்கிக் கணக்கானது Trump...

Developed by: SEOGlitz