மெய்ப்பொருள் காண்பது அறிவு

500 பேர் இன்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு!

- Advertisement -

கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 500 பேர் இன்றைய தினம்  தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள  நபர்களை தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இந்த நடவடிக்கை இன்றையதினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, அனுப்பிவைக்கப்படவுள்ள அனைவரும் இன்று காலை ஏழு மணிக்கு நுகேகொடை பொலிஸ் மைதானத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்களுக்கு தேவையான சுகாதார மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வைத்திய பரிந்துரைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், சிறுபிள்ளைகள் உள்ள தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் நீண்ட நாள் நோயாளர்களும் இவர்களில் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், இவ்வாறு அனுப்பிவைக்கப்படுபவர்கள் தமது ஊர்களில் 14 நாட்கள் அல்லது சுகாதாரத் தரப்பினரால் வழங்கப்படுகின்ற காலப்பகுதிக்கு சுய தனிமையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாடாளாவிய ரீதியில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலில்…!

நாடாளாவிய ரீதியில் இதுவரை  ஒருலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டின் பல்வேறு பாகங்களில் ஒருலட்சத்து 10 ஆயிரத்து  238 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மத அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இவர்களுள்...

ரஞ்சன் சிறைதண்டனை விவகாரம்: இலங்கை அரசியலமைப்பை மீறும் செயற்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள கடூழீய சிறைத்தண்டனை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனத்தை மீறுவதாக அமைந்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு வழங்கப்படும் நீண்டகால...

பிரத்தானிய பிரதமர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல்  தமது நாட்டுக்கான அனைத்து பயண எல்லைகளையும் மூடவுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கை...

அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்: பிரதமர் விளக்கம்!

அடுத்த நான்கு ஆண்டுகளில் மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரணத் துறையின் ஊடாக, ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை அந்நிய செலாவணியாக பெற எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஸ...

எமது நாட்டில் மாத்திரமே தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகிறது: மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் ஏனைய நாடுகளில் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்ற நிலையில் எமது நாட்டில் மாத்திரமே தேசிய சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் ஊவா மாகாணசபை...

Developed by: SEOGlitz