- Advertisement -
- இத்தாலி, ஜோர்டான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இறப்புக்கள் குறைவடையும் நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் இந்தியாவும் கட்டுப்பாடுகளை மெதுவாக தளர்த்த தொடங்கும்.
- சீனாவின் ஆய்வகத்தில் இந்த வைரஸ் தோன்றியது என்பதற்கு “ஏராளமான ஆதாரம்” இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறுகிறார்.
- தலைநகரில் வசிப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்படலாம் என்று ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைச்சு எச்சரித்தது.
- உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 3.5 மில்லியனுக்கும் அதிகமாகும். 247,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், சுமார் 1.1 மில்லியன் பேர் குணமடைந்து உள்ளனர்.
- டெல்லி சில கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில், மதுபானத்திற்காக மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.
- Advertisement -