மெய்ப்பொருள் காண்பது அறிவு

தபால் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

- Advertisement -

தபால் சேவையை தடையின்றி முன்னெடுப்பது தொடர்பில் தபால் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் உள்ள தபால் அலுவகங்களின்  வழமையான நடவடிக்கைகளை     இன்று  முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த  நிலையில்  அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தபால் அலுவலகங்களின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது  தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன   மற்றும் தபால் தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கிடையில்     நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

தபால் அலுவலகங்களின் நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில்   தொடர்பில்   இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தபால் அலுவலகங்களின் வழமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  விடயம் என தபால் தொழிற்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இன்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணி வெற்றி பெறுமா?

13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான இந்த...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம்! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 156 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா...

சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...

நாட்டின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு! சற்றுமுன் வெளியான தகவல்!

மொறட்டுவை, பாணந்துறை மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர...

அமெரிக்க தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரவு 7.35 க்கு குறித்த...

Developed by: SEOGlitz