மெய்ப்பொருள் காண்பது அறிவு

மே மாதத்துக்கான 5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்!

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று முதல் வழங்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏப்ரல் மாதத்துக்கான குறித்த கொடுப்பனவுகள் வழங்கி நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நடவடிக்கையை மே மாதத்திலும் தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய குறித்த நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அத்துடன், மே மாதத்துக்காக வழங்கப்படும் குறித்த கொடுப்பனவை வெசாக் போயா தினத்துக்கு முன்னதாக வழங்கி நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூத்தோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு மார்ச் மாதம் முதல் நபர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கவும் ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தரப்பினரில் ஏற்கனவே பெயர்ப் பட்டியலில் உள்ளடக்கப்பட்ட நபர்கள் மற்றும் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள் ஆகியோருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz