மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்று – இன்றைய நிலவரம் (04/05 – 08.00AM)

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 12 பேர் நேற்றைய தினத்தில் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய,  குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

அத்துடன், 527 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 124 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 51 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 78 பேரும், இரணவில வைத்தியசாலையில் 17 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 132 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 52 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 311 பேரும், ஏனைய 94 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் மே 2ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் 25 ஆயிரத்து 206 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 869 PCR பரிசோதனைகளே இதுவரை ஒருநாளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அதிக அளவு PCR பரிசோதனைகளாக காணப்படுகின்றன.

இந்த நிலையில், ஏப்ரல் 30 ஆம் திகதி ஆயிரத்து 397 PCR பரிசோதனைகளும், மே முதலாம் திகதி ஆயிரத்து 107 PCR பரிசோதனைகளும், நேற்று முன்தினம் ஆயிரத்து 681 PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன், வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த அனைவருக்குமான PCR பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த முகாமில் இருந்த வீரர்கள் மற்றும் விடுமுறைக்கு சென்று திரும்பியவர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராணுவத்தினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் 4 ஆயிரத்து 635 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரையிலான காலப்பகுதியில் ராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 4 ஆயிரத்து 917 பேர் தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படும் மாணவர்கள் உள்ளிட்ட குழுவினரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, மாதுறு ஓயா தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 100 பேர் இன்று தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

பேருவளை பகுதியைச் சேர்ந்த இவர்கள், கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தில் மாதுறு ஓயா தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாகந்துர மதுஷ் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்தொகுதியில் பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்...

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

Developed by: SEOGlitz