பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர் விசேட விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் UL 504 எனும் விமானத்தில் இன்று அதிகாலை 3.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளை அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களிடம் இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசேட பேரூந்துகளில் மாணவர்கள் குழுவினர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு ராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மற்றுமொரு குழுவினரை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் விசேட விமானம் ஒன்று பிரித்தானியாவின் Heathrow விமான நிலையம் நோக்கி பயணித்துள்ளது.
குறித்த விமானம் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 10.40 அளவில் பிரித்தானியாவை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.