வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கடந்த 20 நாட்களில் முதன் முறையாக பொதுமக்கள் முன் பிரசன்னமாகியுள்ளதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையிலான உத்தியோகப்பூர்வ புகைப்படங்கள் சற்று முன் வட கொரியா வெளியிட்டுள்ளது
மே தினத்தை முன்னிட்டே இவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை வட கொரிய அதிபர் கிம் ஜோன் உன்னிற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட இருதய சத்திரசிகிச்சை ஒன்றின் பின்னர், அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன
மேலும் கடந்த 15ஆம் திகதிக்குப் பின்னர் பொது நிகழ்வுகளில் அவர் நேரடியாகத் தோன்றாத நிலையிலேயே அவர் உயிருடன் உள்ளாரா என்பதில் சந்தேகம் நிலவுவதாக அமெரிக்கா உட்பட பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில் வட கொரியாவிலுள்ள உர தொழிற்சாலையொன்றை திறந்து வைப்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் வருகை தந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.