மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள்- சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவிப்பு

- Advertisement -

மேல் மாகாணத்தில் கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேல் மாகாணத்தில் இதுவரை PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் குறித்த பகுதியில் இதுவரை 100 வீதம் நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் நான்காம் திகதியாகும் போது, நாட்டில் சுமுகமான நிலைமையொன்று ஏற்படும் என கணிக்க முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் ஆயிரத்து 397 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , பரிசோதனைகளுக்கு நிகராக, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், வழமையாக மேற்கொள்ளப்படுகின்ற 1500 பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேவை ஏற்படின் நாளாந்தம் மூவாயிரம் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான இயலுமையும் தற்போது காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைக்குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயம்!

வவுனியா, இரணை இலுப்பைக்குளம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கமைய, குறித்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே...

அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்த சூடான் அரசியல் கட்சிகள்!

இஸ்ரேலுடன் சுமூகமான உறவைப் பேணும் அரசாங்கத்தின் தீர்மானத்தை சூடான் அரசியல் கட்சிகள்  நிராகரித்துள்ளன. இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியொன்று உறுவாக்கப்படுமென சூடான் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். நாடுகளுக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர இணங்கியுள்ளதாக இஸ்ரேல்,...

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

Developed by: SEOGlitz