மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டதா?

- Advertisement -

COVID 19 எனப்படும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கக்கப்பட்டதோ அல்லது மரபணு மாற்றத்தால் உருவானதோ இல்லை என அமெரிக்க உளவுத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இருப்பினும், கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அமெரிக்க உளவுத்துறை ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இதன் அடிப்படையில், கொரோனா வைரஸ் பரவல் விலங்குகளிடம் இருந்து பரவியுள்ளதா அல்லது ஆய்வக விபத்தில் இருந்து வெளியானதா என்பது தொடர்பில் தொடர்ந்தும் ஆராயப்படுவதாக அமெரிக்க புலனாய்வுத் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் ஆய்வகம் ஒன்றிலிருந்தே கொரோனா வைரஸ் வெளியானதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சீனா அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ளதுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தை விமர்சித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இன்றைய IPL தொடரில் Sunrisers Hyderabad அணி வெற்றி பெறுமா?

13ஆவது IPL தொடரின் 47 ஆவது போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் அமைந்துள்ள டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. Sunrisers Hyderabad அணிக்கு எதிரான இந்த...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம்! சற்றுமுன் வெளியான தகவல்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 156 பேர் ஆகியோருக்கு இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா...

சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி!

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் தொழில் அபிவிருத்திக்கான கடன் வசதிகளை வழங்குவதற்காக சுயசக்தி கடன் யோசனைத் திட்டத்தை திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட...

நாட்டின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு! சற்றுமுன் வெளியான தகவல்!

மொறட்டுவை, பாணந்துறை மற்றும் ஹோமாகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உடன் அமுலாகும் வகையில் இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் சவேந்திர...

அமெரிக்க தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரவு 7.35 க்கு குறித்த...

Developed by: SEOGlitz