நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 187 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 502 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.