மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர்கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 2000 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

- Advertisement -

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 2000 பேர் விசேட பேருந்துகளின் மூலம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

கடந்த இரண்டு மாத காலமாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலாக்கப்பட்டு வருவதன் காரணமாக தமது ஊர்களுக்கு செல்ல முடியாமல் இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று வெள்ளிக்கிழமை (15) காலை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய விளையாட்டு மைதானத்திலிருந்து விசேட பேருந்துகளின் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

- Advertisement -

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் மேற்பார்வையின் கீழ் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியிருந்தவர்களே இன்று ஊர்களுக்கு அனுப்பப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலரும் இவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் அடங்குவர்.

தமது ஊர்களுக்கு திரும்பிச் செல்ல வந்தவர்கள் சுகாதார வழி முறைகளுக்கு இணங்க வரிசையில் நின்றதோடு முகக் கவசம் அணிந்திருந்தனர். அத்துடன் அவர்கள் அனைவரும் கிருமி தொற்று அகற்றும் வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றம் பொலிஸார் பங்குபற்றினர்.

நீர்கொழும்பில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 2000 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு 1

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் விசேட தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை செல்லாத மாணவர்கள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட செயலகம் தீர்மானித்துள்ளது பாடசாலை மாணவர்கள் பலர், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள காரணத்தினால் பாடசாலைகளுக்கு செல்வதில்லை என தகவல் கிடைக்கப்...

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு!

2020 ஆம் ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கத்தினால், 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கடந்த...

போதைப்பொருளுடன் சீதுவை பகுதியில் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சீதுவை பகுதியில் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 150 கிராம் ஹெரொயின் மற்றும் கேரள கஞ்சா 6 கிலோ ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறித்த...

இலங்கயில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மாலி நாட்டிற்கு அனுப்பி வைப்பு!

இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்ட புதிய ஒன்பது நவீன Unibuffels கவச வாகனங்கள், மாலி நாட்டில் பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்களும் இவ்வாறு பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, ஜனநாயகம் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் உள்ளடக்கம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி நிமல் புன்ச்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி,...

Developed by: SEOGlitz