நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 962 ஆக அதிகரித்துள்ளது.
கொரொனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிக்கு ஏற்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அிறக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுக்குள்ளான 415 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.