மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் கடும் மழை – 11 வீடுகள் சேதம்

- Advertisement -

வவுனியாவில் ஏற்பட்ட காற்றுடன் கூடிய கனமழை காரணமாக 11 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நேற்று (17.05) இரவு பெய்த காற்றுடன் கூடிய கனமழை  காரணமாக வவுனியாவில் இரண்டு பிரதேச செயலக பிரிவுக்களுக்குட்பட்ட பகுதிகள்  இவ்வாறு சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதற்மைய வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதங்குளம், ஒமந்தை, வேலன்குளம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதிகளும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அவுரம்துலாவ, அவுசதப்பிட்டிய ஆகிய பகுதிகளிலும் உள்ள 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் பாதிப்படைந்த வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு இழப்பீடாக ரூபாய் 10 ஆயிரம் (10,000) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  ஈரப்பெரியகுளம் பகுதியில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததையடுத்து வீதியின் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து பாதுகாப்பு தரப்பினரால் குறித்த மரம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கடும் மழை - 11 வீடுகள் சேதம் 1வவுனியாவில் கடும் மழை - 11 வீடுகள் சேதம் 2

வவுனியாவில் கடும் மழை - 11 வீடுகள் சேதம் 3

வவுனியாவில் கடும் மழை - 11 வீடுகள் சேதம் 4

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் சடுதியாக அதிகரித்த உயிரிழப்புக்கள்!

கொரோனா தொற்றினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இவ்விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 428 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்து...

சுகாதார வழிமுறைகளுடன் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானம் : பிரதி சபாநாயகர்!

கொரோனா தொற்று குறித்த உரிய சுகாதார வழிமுறைகளை கையாண்டு நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சி...

வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருத்துவ கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றாளர்கள் மூவர்...

புலமைப் பரிசில் பரீட்சை மூலம் பாடசாலை அனுமதிக்குத் தடை? : அமைச்சர் பந்துல!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மையமாகக் கொண்டு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடைமுறை குறித்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Developed by: SEOGlitz