ஷவ்வால் மாத தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறவுள்ளதாக பெரிய பள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டில் எங்காவது தலைப்பிறை தென்பட்டால் 0112 4322 110 அல்லது 0112 451 245 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.