ரத்து செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் ரத்து செய்யப்பட்ட விடுமுறை இந்த மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறை மற்றும் நாளாந்த ஓய்வு இரத்து செய்யப்பட்டிருந்தது.
கடந்த மாதம் 10ஆம் திகதி வரை உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் அதிகாரிகளினது விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.