முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்னொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்திய மூர்த்தி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் கடந்த ஏப்ரல் கடந்த 11 ஆம் திகதி முழங்காவில் பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
மேலும், அவருடைய சகோதரனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 75 பேருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.